தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி தாளமுத்து நகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திர பிரியா (31) என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளதாம், இதனால் விரக்தி அடைந்த சந்திர பிரியா தனது 3 குழந்தைகளுக்கும் தலைக்கு தேய்க்கும் சாயத்தை குடிக்கச் செய்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 4 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.