<p><span style="font-weight: 700;">நம்ம ஊரு ஆரோக்கியபுரம் நண்பர்கள் குழு சாா்பில் தாளமுத்துநகா்&nbsp; தோமையாா் ஆலயம்&nbsp; முன்பு&nbsp; கொரோனா எதிா்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீா்&nbsp; வழங்கப்பட்டது</span>.</p><p>நம்ம ஊரு ஆரோக்கியபுரம் குழு சார்பாக பொது மக்களுக்கு இன்று 08.03.2021 காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை தாளமுத்துநகா் பங்கு தந்தை&nbsp; நெல்சன்ராஜ், உதவி பங்கு தந்தை ஸ்டீபன்மாியதாஸ் ஆகியோா் சிறப்பு&nbsp; அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினர்.</p><p>இதில், தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற அமைப்பாளா் லாரன்ஸ், மாப்பிள்ளையூரனி&nbsp; ஊராட்சி அன்னை தெரஸா நற்பணி மன்ற தலைவா் தொம்மை அந்தோணி, பொருளாளா் ஜெயராம், உதவி தலைவா் ஜெயசீலன், உதவி செயலாளா் முத்துக்குமாா், உட்பட&nbsp; பலா்&nbsp; கலந்து&nbsp; கொண்டனா்.</p>