தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
நிருபர்
July 23, 2021
இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
<p><b>தூத்துக்குடியில் இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். </b></p><p>இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி ஆவுடையார் புரத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் கணேசன் (41), இவர் தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலைபார்த்து வந்தார். இன்று ( 23.7.2021 ) சுமார் மதியம் 1 மணியளவில் ஒரு வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்தபோது எதிர்பாராதவிதமாக உடலில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். </p><p>இதில் மயக்கம் அடைந்த கணேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறநதுவிட்டதாக தெரிவித்துள்ளர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.</p>