தூத்துக்குடி மாநகரில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் தேங்கிய மழைநீர் மற்றும் செடிகளால் மாணவர்களின் பாதுகாப்பும், சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. ஆகவே, அப்பகுதிகளை தூய்மை படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தூத்துக்குடி மாநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியான சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கிய நிலையில் நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது, 6 அடி உயரத்திற்கு மேல் கோரை புல்கள் மற்றும் ஊர்வன  ஜந்துக்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.