சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஐடிஐ ( பிட்டர், டர்னர், பெயிண்டர், வெல்டர், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக்) தேர்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

விருப்பம் உள்ளவர்கள் குரோம்பேட்டையில் உள்ள சென்னை மாநகர் போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது