காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் - பாதுகாப்பு படையினர் அதிரடி!
நிருபர்
February 19, 2021
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் - பாதுகாப்பு படையினர் அதிரடி!

ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பட்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதி மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி வாலாட்டி வருகின்றனர். இதேபோல் பயங்கரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். நமது பாகாப்பு படையினர் அவர்களின் முயற்சிகளை முறியடித்தது வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் பட்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறந்த 3 பேரும் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

துரதிருஷ்டவசமாக பயங்கரவாதிகள் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றொரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார்.