<p><b>சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்&nbsp; உத்தரவுபடி தூத்துக்குடி ஊரக காவல் உதவி&nbsp; கண்காணிப்பாளர் சந்தீஸ்&nbsp; மேற்பார்வையில்&nbsp; சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று (27.06.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மடத்தூர் ரோடு 3வது மைல் பகுதியில் சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்&nbsp; தூத்துக்குடி 3வது மைல், தபால் தந்தி காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (23) என்பதும், அவர் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.</p><p>உடனே மேற்படி போலீசார்&nbsp; ராஜபாண்டியை கைது செய்தனர். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார்&nbsp; வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>மேலும் கைது செய்யப்பட்ட&nbsp; ராஜபாண்டி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் மற்றும் சிப்காட்&nbsp; ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>