எப்போதும்வென்றான் அருகே பள்ளி சிறுமி திடீர் மரணம் : போலீசார் விசாரணை!
நிருபர்
January 29, 2025
எப்போதும்வென்றான் அருகே பள்ளி சிறுமி திடீர் மரணம் : போலீசார் விசாரணை!

எப்போதும்வென்றான் அருகே 6வது வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் மாலதி (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 வது வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி அரிசி சாப்பிடுவாராம். அரிசி செரிமானம் ஆகாமல் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 27ம் தேதி அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) நவநீத கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.