பசுவந்தனை அருகே கண்மாயில் மூழ்கி மூதாட்டி பலி : போலீசார் விசாரணை!
நிருபர்
January 24, 2025
பசுவந்தனை அருகே கண்மாயில் மூழ்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

பசுவந்தனை அருகே கண்மாயில் மூழ்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள குமாரரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி மனைவி சிவகாமி ( 67 ) இவர் நேற்று முன்தினம் மதியம் குளிப்பதற்காக அங்குள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடிச் சென்றனர்.

அப்போது அவர் கண் மாயில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் மூதாட்டி உடலை மீட்டி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிவகாமி குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இருந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.