விளாத்திகுளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு மகராஜபுரம் கிராமத்தில மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நேற்று காலை நடையை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்ட்டிருந்தது. மேலும், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

உண்டியலில் ரூ.20ஆயிரம் வரை பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தாவான மகராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த காளிராஜன் மனைவி சொர்னமணி (60) என்பவர் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.