கையில் தேசிய கொடி... கருங்குளம் வடக்கு ஒன்றிய பாஜகவின் தேசப்பற்று!
நிருபர்
August 13, 2025
தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முறப்பநாடு ஸ்ரீ நங்கமுத்தம்மன் கோவிலிலிருந்து ஸ்ரீ பெருமாள் கோவில் வரை திரங்கா யாத்திரை தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முறப்பநாடு ஸ்ரீ நங்கமுத்தம்மன் கோவிலிலிருந்து ஸ்ரீ பெருமாள் கோவில் வரை திரங்கா யாத்திரை தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை தேசத்தின் மக்கள் மூவர்ணக் கொடி ஏந்தி கொண்டாடி மகிழ்ந்தார்கள். எனவே வருகிற சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். திரங்கா (மூவர்ணக் கொடி) யாத்திரை வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஆக., 10ம் தேதி முதல் நடத்திட தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.

அதன்படி, தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முறப்பநாடு ஸ்ரீ நங்கமுத்தம்மன் கோவிலிலிருந்து ஸ்ரீ பெருமாள் கோவில் வரை திரங்கா யாத்திரை தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு, ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மத்திய அரசு வழக்கறிஞரும் மாவட்ட துணை தலைவருமான செந்தில்குமார் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கருங்குளம் ஒன்றியம் சார்பாக முன்னாள் மண்டல் தலைவர் நங்கமுத்து, பேச்சி, சீனிவாசன், பால்துரை, அருண்குமார், முருகன், சுடலைமுத்து, தம்பான், விநாயகப் பெருமான், சாமிநாதன், மாரி, சாந்தி, ஆறுமுகத்தாய், சீனிவாசன், தங்கராஜ், கணேசன், ஆறுமுகம், அழகிரிசாமி, வெள்ளைச்சாமி, செந்தூர் பாண்டியன், சிவசுப்பிரமணியன், மாரியப்பன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.