தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை : போலீஸ் விசாரணை!
நிருபர்
December 18, 2024
தூத்துக்குடி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரைச் சேர்ந்தவர் சூசைராஜ் மகன் தேம்பவணி (50). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இரவு நேரங்களில் முத்தையாபுரம் பல்க் அருகேயுள்ள பிள்ளையார் கோவில் வாசலில் படுத்து தூங்குவாராம். இந்நிலையில், இன்று அதிகாலை மார்கழி மாத பூஜைக்காக கோவிலை திறக்க பூசாரி வந்தபோது, தேம்பாவணி வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்தையாபுரம் பகுதியில் ஓட்டலில் வேலை செய்யும் ஒருவருக்கும் தேன் பவானிக்கும் இடையே நேற்று இரவு மது அருந்துபோது தகராறு ஏற்பட்டதாம்.

இதனால், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தேம்பாவணிக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ராஜபாளையத்தில் வசித்து வருகின்றனர். கொலை தொடர்பாக முத்தையாபுரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .