<p><b>சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய்&nbsp; விஷம் குடித்து&nbsp; &nbsp; தற்கொலை செய்து கொண்டார்.&nbsp;</b><br></p><p>சாத்தான்குளம்&nbsp; அருகே உள்ள பண்டாரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி பஞ்சவர்ணம் (45). இவரது கணவர் கடந்த&nbsp; 18ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இந்நிலையில் இவரது ஓரே&nbsp; மகன் வசந்தகுமார், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. . இதனால் தாய் பஞ்சவர்ணம், மகன் தற்கொலை செய்து&nbsp; இடத்தை பார்த்து&nbsp; மிகவும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனை பார்த்த அவரது சகோதரர் ராமசந்திரன் அவரது&nbsp; வீட்டிற்கு&nbsp; &nbsp;அழைத்து சென்று பஞ்சவர்ணத்தை கவனித்து வந்துள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில் இன்று காலை பஞ்சவர்ணம், அவரது வீட்டிற்கு சென்று விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் சாத்தான்குளம்&nbsp; காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>