<p><b>சாத்தான்குளத்தில் இருந்து வேளாங்கண்ணி&nbsp; சென்ற முதியவர் மாயமானது குறித்து தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.&nbsp;</b></p><p>சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84).&nbsp; இவருக்கு இரண்டு மகன் , ஒரு மகள் உள்ளனர்.&nbsp; தற்போது முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ஆம்தேதி&nbsp; வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின் வீடு திரும்ப வில்லையாம். அவர் எங்கு சென்றார் எனவும், தடுமாறி வேறு பகுதிக்கு சென்றுவிட்டாரா என்பதும்&nbsp; தெரியவில்லை.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இதுகுறித்து அவரது பேரன் அண்டோ அருண் ரஞ்சித் தட்டார்மடம்&nbsp; காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அனிதா வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.</p>