<p><b>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர்&nbsp; தர்மராஜ். இவர் பேய்குளத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை&nbsp; கடையை திறக்க வந்தபோது&nbsp; அதில் புள்ளி மான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது.</b><br></p><p>அதனைப் பார்த்த தெரு நாய்கள்&nbsp; மானை துரத்தி உள்ளது. இதனையடுத்து தர்மராஜ்&nbsp; மற்றும் பொதுமக்கள்&nbsp; துரத்திய நாய்களை விரட்டி விட்டு மானை&nbsp; பத்திரமாக பிடித்து கடையில் வைத்துள்ளனர். இதுகுறித்து&nbsp; திருச்செந்தூர் வனத்துறை&nbsp; அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். வனத்துறையினர்&nbsp; வந்து மானை பத்திரமாக மீட்டு வல்லநாடு மான்கள் சரணாலயத்தில் பத்திரமாக விட்டனர்.</p>