சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை , ஆண்டு ஊதிய  உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமபடுத்தியும், பெண் ஆசிரியர்  அலுவலகத்திற்கு வர அச்சமடையும் வகையில், பள்ளி கல்வித்துறைக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்  செயல்படும்  அலுவலக கண்காணிப்பாளர் நீலநாராயணனை கண்டித்தும், அலுவலக தேக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சாத்தான்குளம் கிளை  சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்த்து.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் அந்தோணி ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட  துணைத் தலைவர் தங்கராஜன் முன்னிலை வகித்தார்.  வட்டார செயலாளர் அருள்ராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவன், மாவட்டத் தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் மாரிகணேஷ், ,பொதுக்குழு உறுப்பினர் முருகன்,  முன்னாள் மாநில துணைத் தலைவர் பால்பாண்டி, , திருச்செந்தூர் வட்டார செயலாளர் தியாகராஜன், ஆழ்வார்திருநகரி வட்டார செயலாளர் மகேஷ் துரைசிங்,  உடன்குடி வட்டார செயலாளர் மகாலிங்கம், , மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ்லின் விண்ணரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்ககுமார், பேச்சிமுத்து, முருகன், ஒய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் நம்பித்துரை, முல்லர், செல்வக்குமார், எபனேசர், உள்ளிட்ட ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  வட்டார பொருளாளர் அந்தோணி யூஜின் நன்றி கூறினார்.