கோவில்பட்டி அருகே மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி ஊராட்சி மெய்த்தலவன் பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள் குடியிருந்து வருகின்றார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகளான சுடுகாட்டுப் பாதை, குடிநீர் வசதி, சாலை வசதிகள் மற்றும் பாழடைந்த கிணற்றினை சீரமைக்கோரி  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர், ஊராட்சி ஒன்றிய மேலாளர் அனந்தலெட்சுமிடம் மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.