<p><b>ஏரல் அருகே தடுப்பணையில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</b><br></p><p>தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் ( 62 ) . இவரும் இவரது உறவினர் ஆறுமுகம் என்பவரும் ஏரல் அருகே உள்ள மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று மாலையில் சென்றாராம். அப்போது கனகராஜ் எதிர்பாராமல் நீரில் மூழ்கினராம். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.</p><p>அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>