தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக  ரூ.10 ஆயிரத்தை, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம், ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமையில், பொருளாளர் துரைராஜ், துணைச்செயலாளர் மாடசாமி, சொர்ணம் ஆகியோர் வழங்கினர்.