100 நாட்களில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்து பேசினார்.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முனைப்புடன் உள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  அவர் பொதுமக்களிடையே பேசும்பொழுது, 100 நாட்களில் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினார்.  அப்படி குறைகளுக்கு தீர்வு இல்லையெனில் மக்களாகிய நீங்கள் கேள்வி கேட்கலாம் என்றும் கூறினார்.