பாராளுமன்ற தேர்தல் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
நிருபர்
March 26, 2024
பாராளுமன்ற தேர்தல் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதிக்கு, திமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.