<p><b>மார்ச் 21 உலக வன நாளை முன்னிட்டு, செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வனத்துறையினரால் உலக வன நாள் கொண்டாடப்பட்டது.</b></p><p>ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி&nbsp; செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் ராயப்பன்&nbsp; முன்னிலை வகித்தார்கள்.</p><p>இதில்&nbsp; பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஸ்கார், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், உலக வன நாளை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வனவர் மகேஷ், வன காவலர் லட்சுமணன், சமூக ஆர்வலர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>