முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி பெண் காவலருக்கு எஸ்பி பாராட்டு
நிருபர்
May 05, 2023
முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி பெண் காவலருக்கு எஸ்பி பாராட்டு
<p><b>முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.</b></p><p>தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றிவரும் பெண் தலைமை காவலர் ஜெயாவின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கிகரித்து 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை கடந்த 26.01.2023 அன்று வழங்கி கௌரவித்தது.</p><p>மேற்படி முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற பெண் தலைமை காவலர் ஜெயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை இன்று (05.05.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் சந்திந்து வாழ்த்து பெற்றார்.</p><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தினார்.</p>