தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
நிருபர்
March 02, 2024
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
<p><b>தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார். </b><br></p><p>திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் 1ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டசத்து பெட்டகங்களை 2.03.24 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். </p><p>இந்நிகழ்வில், மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டிகேஎஸ்.ரமேஷ், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ஐ.ரவி, அரசு வழக்கறிஞர் ஆனந்த கபிரியேல் ராஜ், தொழிலாளர் அணி முருகஇசக்கி, ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட அணி துணை அமைப்பாளர் கோகுல்நாத், மாநகர சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, விஜயலெட்சுமி, கந்தசாமி, கண்ணன், ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் சூர்யா, மகளிரணி ரேவதி, மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>