<p>L<b>தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி மாரீஸ்வரி (25). இவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரேம்குமார் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை மாரீஸ்வரி கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் மாரீஸ்வரியை தாக்கி உள்ளார்.&nbsp;</p><p>இதனை தடுக்க முயன்ற அந்த பகுதியை சேர்ந்த முனீஸ்வரன், நாகூர்கனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் காயம் அடைந்த மாரீஸ்வரி உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.</p>