<p><b>தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவையொட்டி நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.&nbsp;</b></p><p>தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை வந்து சிப்காட் வளாக பர்னிச்சர் பார்க் அருகே அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும், சூசைபாண்டியபுரம் மங்களகிரி விலக்கு அருகே நலதிட்ட உதவிகள் வழங்க உள்ளார்.&nbsp;</p><p>இதனை முன்னிட்டு, விழா மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.&nbsp; இப்பணிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.</p><p>அப்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்தசேகரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், திமுக நிர்வாகிகள் உமரி சங்கர், கே.பி. ராஜா ஸ்டாலின், வழக்கறிஞர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.&nbsp;</p>