விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் எட்டையாபுரம் பேரூராட்சி உதவி நிர்வாக அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஓவ்வொரு சனிக்கிழமையும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வியாபாரத்திற்காக ஆடுகளை ஏற்றி, எட்டையபுரம் ஆட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு சந்தையில்  குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆகவே, வியாபாரிகளுக்கு எட்டையபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும், எங்களது கோரிக்கையை நிறைவேற்ற பேரூராட்சி நிர்வாகம் தவறும் பட்சத்தில் , அதிமுக  எட்டையபுரம் பேரூர் கழகம் சார்பில் எட்டையபுரம் பேரூராட்சியை கண்டித்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெருவித்துக்கொள்கிறோம்.

இதில், மகளிர் அணி செல்வி, சாந்தி, நகர அவைத் தலைவர் சேனா கணபதி, காட்டன் பிரபு அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.