தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் மாற்றம்!
நிருபர்
February 02, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</b></p><p>வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதன்படி, சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் திருமங்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை பெருநகரம் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் ஜெய்சிங், தூத்துக்குடி அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சிவசுப்புவிற்கு பதில் மாற்றப்பட்டுள்ளார்.</p><p>திருவாரூரில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊரக டிஎஸ்பியாக ராணிப்பேட்டையில் பணியாற்றிய ராஜசுந்தர் மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ளார்.</p>