விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பேரூராட்சி அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவைகள் தெருவில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

நாய் கடியால் தினமும் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனையடுத்து,  வெறிநாய் கடி தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாத்திடவும், தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தவும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்,  வட்டாட்சியர் ரகுபதி,காவல் ஆய்வாளர் ரமேஷ்,அரசு மருத்துவமணை மருத்துவர் பிரவீன் குமார், பேரூராட்சி செயல் அலுவலர்,கிளாக்,அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.இரா.முனிய சக்தி ராமச்சந்திரன்,  விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், நடராஜன், புதூர் ஒன்றியச் செயலாளர் ஞானகுரு சாமி

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள்,  வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.