தூத்துக்குடி தொழில் அதிபரின் காரில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!
நிருபர்
December 30, 2022
தூத்துக்குடி தொழில் அதிபரின் காரில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தூத்துக்குடி தொழில் அதிபரின் காரில் ரூ.25 லட்சம் கொள்ளையடித்தவழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தொழிலதிபரான இவர் கடந்த 19-ந் தேதி நெல்லை கே.டி.சி. நகருக்கு வந்தார். அப்போது அவரது காரில் இருந்த ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த செல்வ சரவண கண்ணன் (25), நெல்லை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியை சேர்ந்த முத்துகுமார், நெல்லை தியாகராஜநகரை சேர்ந்த விஜய் ஆகிய 2 பேரும் சேரன்மாதேவி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே மீதி பணமும் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.