<p><b>சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.</b></p><p>சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி வெற்றி பெற்றார். தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றதில் இருந்து தூத்துக்குடி மாநக மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பாக பணியாற்றி வருவதாக பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், சென்னை சென்றுள்ள தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.</p><p>இந்த நிகழ்வின்&nbsp; போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார்</p>