<p><b>தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் இன்று பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.&nbsp;</b></p><p>உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 440வது&nbsp; திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக்ஸ்ட் 5-ம் தேதி அன்னையின் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மற்றும் மீனவர் அணியின் சார்பாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.&nbsp;</p><p>இதில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், துணை தலைவர்கள் வாரியார், சுவைதர், தொழில் பிரிவு மாநில செயலாளர் பாஸ்கர்,&nbsp; தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து,&nbsp; மண்டல தலைவர்கள் ராஜேஷ்கனி வினோத், அணி பிரிவு மாவட்ட தலைவர்கள்&nbsp; காளிராஜா,&nbsp; விக்னேஷ், ஓம்பிரபு , சுந்தர் கணேஷ், கலை செல்வன்,&nbsp; மீனவர் அணி ஜோசப், பொய் சொல்லான், நஸ்ரின், தமிழ் செல்வி,&nbsp; லட்சுமி, சங்கர் கணேஷ் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>