சென்னை-எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 4ம் தேதி சிறப்பு ரயில்
நிருபர்
December 02, 2020
சென்னை-எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 4ம் தேதி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 4ம் தேதி மாலை 4மணிக்கும் எழும்பூரில் இருந்து காரைக்காளுக்கு 4ம் தேதி இரவு 9மணி அளவிலும் சிறப்பு ரயில்_தெற்கு ரயில்வே

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்:06105), சென்னையில் இருந்து வரும் 4-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

இதைப்போல் திருச்செந்தூர்- சென்னை சிறப்பு ரெயில் (06106), திருச்செந்தூரில் இருந்து வரும் 5-ந்தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை எழும்பூர்-காரைக்கால் சிறப்பு ரெயில்(06175), வரும் 4-ந்தேதி இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.50 மணிக்கு காரைக்கால் சென்றடையும். இதைப்போல் காரைக்கால்- சென்னை சிறப்பு ரெயில் (06176), வரும் 5-ந்தேதி இரவு 9.20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு சென்னை வந்தடையும்.

மேலும் விழாக்கலங்களை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகா மற்றும் ஒடிசா வழியாக செல்லும் 30 சிறப்பு ரெயில்களின் பயண காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.