தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2022-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 28.07.2022 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து  நடைபெற உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.