<p><b>தமிழகத்தில் நேற்று&nbsp; நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், 60 நிறுவ னங்கள், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அரசுடன் கையெழுத்திட்டன.&nbsp;</b><br></p><p>இதில், ‘ஆக்மே' நிறுவனம், 52 ஆயிரத்து 695 கோடி ரூபாய் முதலீட்டில், துாத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தி திட்டத்தைத் துவங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>தமிழக தொழில் துறை சார்பில், முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஆக்மே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக, துாத்துக்குடியில் உள்ள 2,095 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>