கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நிருபர்
July 04, 2022
கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</b></p><p>கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்.சாண்டு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கரும்பன், நகர செயலாளர் சரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பரமராஜ் மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். </p><p>ஆர்ப்பாட்ட முடிவில் உதவி ஆட்சியர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எம்.சாண்டு மணல் விலையை தனியார் குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர். இதனால் லாரி உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எம்.சாண்டு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இதில் அரசு தலையிட்டு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.</p>