தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 11.05.2024 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கந்த சுப்பிரமணியன் (26) மற்றும் தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன் (34) ஆகிய இருவரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட கந்த சுப்பிரமணியன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்தும்

கடந்த 12.05.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை சிறுப்பாடு ஜங்ஷன் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (எ) பாலா (24) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்ட  பாலமுருகன் (எ) பாலா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் 1) கந்த சுப்பிரமணியன், தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் 2) ஜெயராமன் மற்றும்  புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் 3) பாலமுருகன் (எ) பாலா ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள்  3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.