இதெல்லாம் இருந்தால் தான் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் இயங்க அனுமதி - மாவட்ட ஆட்சியர்!
நிருபர்
June 11, 2022
இதெல்லாம் இருந்தால் தான் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் இயங்க அனுமதி - மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், இன்று (11.06.2022)ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பள்ளி கல்வித்துறை மூலமாக பள்ளிகள் அனைத்தும் வருகின்ற திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் முன் 2012 விதிகளின்படி பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் ஆய்வு செய்யப்படுகிறது,

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 133 வாகனங்கள், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 120 வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் செவ்வாய், புதன், வியாழக்கிழமை பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திலும் தரையில் இருந்து 25 செ.மீ. உயரத்தில் படிக்கட்டு, வாகனத்தின் உள்ளே தரமானதாக இருக்கைகள், கேமிரா, அவசரகால வழி, முதலுதவி மருந்துகள், தீயணைப்பு கருவி ஆகியவை இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.

வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 கி.மீ. வேகத்திற்கு மேல் சென்றால் வாகனங்கள் நின்றுவிடும். ஏர் ஹாரன் பொருத்தக்கூடாது. பள்ளி வாகனங்களில் இவை அனைத்தும் இருந்தால்தான் வாகனங்ளை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும். ஆட்டோக்களும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.