தூத்துக்குடியில் மது குடித்ததை தனது தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்தவர் சாலமோன் மகன் மனோ கிறிஸ்டோபர் (29). இவர் அங்குள்ள ஒரு பிளேவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து செலவழித்து விட்டாராம்.

இதனால்,  அவரது தந்தை அவரை கண்டித்துள்ளார். இதில் மன வேதனை அடைந்த மனோ கிறிஸ்டோபர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.