தூத்துக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன தலைமை அதிகாரி - தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர்
நிருபர்
April 22, 2022
தூத்துக்குடி அருகேயுள்ள கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன தலைமை அதிகாரி - தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர்

தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணியில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் தீயணைப்புபடையினர் பத்திரமாக மீட்டனர்

தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி மெயின் ரோட்டில் பிரபல தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி(CEO)யான கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபினோ ஜோஸ்(வயது35) என்பது அந்நிறுவனத்தில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிறுவன வளாகத்திலுள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புப்படை நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபினோ ஜோஸை பத்திரமாக மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து அவருக்கு மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.