<p><b>சொத்து வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது</b>.&nbsp;<br></p><p>தமிழக அரசின் சொத்து வரி உயர்வு ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p> ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் மன்சூர் அலி, உழக்குடி அசுபதி, மாவட்ட துணைச் செயலாளர் மருதன் வாழ்வு ரவி&nbsp; பெருமாள், ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தூர் பாண்டியன், ராஜா, இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன், மாநகர மீனவர் அணி செயலாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>