ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி
நிருபர்
March 21, 2022
ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற திரவியம். இவருடைய மகன் சொர்ணபாண்டி (வயது 34). இவர் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினரின் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

அந்த ஆட்டோவில் தனது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த ராமர், மந்திரமூர்த்தி ஆகியோரையும் அழைத்து சென்றார்.

வெள்ளூர் கஸ்பா குளம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி குளத்துக்குள் பாய்ந்து சென்று கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் அடியில் சிக்கிய சொர்ணபாண்டி பலத்த காயமடைந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராமர், மந்திரமூர்த்தி ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சொர்ணபாண்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சொர்ணபாண்டிக்கு ஆனந்தி என்ற மனைவியும், திருநீலகண்டன் என்ற மகனும் உள்ளனர்.