தாளமுத்துநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் இந்திரா நகர், பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கனகராஜ் (22) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 16.03.2022 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.

இதனையடுத்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மகன் பீர்முகம்மது (23) என்பவர் மேற்படி கனகராஜின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்து நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்கு பதிவு செய்து  பீர்முகம்மது என்பவரை கைது செய்து, மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,10,000/- மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.