தூத்துக்குடியில் சந்திரபாபு நினைவு தினத்தை முன்னிட்டு பரதர் நலசங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி திரைப்பட துறையில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த சந்திரபாபுவின் 48ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பரதர் நலசங்க அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுச் செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, அவை முன்னவர் சேவியர் வாஸ், செயலாளர் இன்னாசி ஆகியோர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஜெயந்திராஜ், மனவை ரூஸ்வெல்ட், ஜெகன், சந்திரபாபு, ஞானம், பெசில், விஜயகுமார், ரெனோ, பரத், இன்சியா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாத்திமாநகரில் புல்டன் ஜெசின் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.