தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் இன்று  காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அம்மா உணவகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடன் இருப்போருக்கான மலிவு விலையிலான உணவு தேவையினை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பலன் அடைந்து வருகின்றனர்.

மேலும், மாலை நேரத்திலும் உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ( ஜூன் ) மாதம் முதல் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமைக்கப்படும் உணவின் தரம், சமையல் பொருட்களின் கையிருப்பு உள்ளிட்ட அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் இன்று ( 7.8.25 )  காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.