தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44 & 48 வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
நிருபர்
February 03, 2022
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : 44 & 48 வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
<p><b>தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 44 மற்றும் 48 ஆகிய வார்டில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் சிந்தியா வயலட் லில்லி, தனலட்சுமி ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.</p><p>இந்த நிலையில் இன்று 44 வது வார்டில் சிந்தியா வயலட் லில்லியும், 48 வது வார்டில் தனலட்சுமியும் ஆகியோரும் , காங்கிரஸ் சார்பில் போட்டியிட தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>