<p><b>தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான 17 வது வார்டில் போட்டியிட பாஜக சார்பில் மாரிச்சாமி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.</b><br></p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.</p><p>இந்த நிலையில் இன்று&nbsp; ராஜீவ் நகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், காந்தி நகர், ஹரிராம் நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட 17 வது&nbsp; பொது வார்டில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட மாரிச்சாமி என்பவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>