<p><b>மாணவி லாவண்யா விவகாரத்தில் ஏன் கனிமொழி குரல் கொடுக்கவில்லை என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.</b></p><p>பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவரால் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, பள்ளிக்கு எதிராக கொதித்தெழுந்த&nbsp; கனிமொழி&nbsp; அவர்களே, தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி புனித ஹிருதய பள்ளியின் மதமாற்ற கொடுமையினால் உயிரிழந்த லாவண்யா மரணம் குறித்து உங்களின் மௌனம் ஏன்? என்று கேட்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.</p><p>அவர் மேலும்,&nbsp; ‘’மத அரசியலா? மதவாதமா? ஓ! நீங்கள் பகுத்தறிவுவாதியல்லவா? மறந்து விட்டேன்’’என்கிறார்.</p><p>சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்திலும் கனிமொழி எம்பி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.&nbsp; ஆனால் மாணவி லாவண்யா விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று தான் நாராயணன் திருப்பதி இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.</p>