<p><b>இட்டமொழி ஊராட்சியில் ஏழை எளிய மக்களுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.</b></p><p>நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழி பஞ்சாயத்தில்&nbsp; உள்ள காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் வைத்து ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.</p><p>இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு&nbsp; நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.</p><p>இந்நிகழ்வில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்ஃபோர்டு, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, இட்டமொழி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் ஞான்ராஜ், சித்திரைவேல், ஐசக், சரவணன், உள்ளிட்டோர்&nbsp; கலந்து கொண்டனர்.</p>