<p><b>தூத்துக்குடியில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு புதிய லைன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பணம் கொடுக்க வேண்டாம் என&nbsp; மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.</b></p><p>இது <b style="color: rgb(156, 0, 255);">தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு:&nbsp;</b></p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் புதியதாக (கருப்பு பைப் லைன்) மூலம் அமைக்கப்படும் குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே உள்ள வீட்டு இணைப்புகளுக்கு பதில் புதியதாக வீட்டு இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவு மாநகராட்சி மூலமாக வழங்கப்பட்டுள்ளது. </p><p>எனவே பொதுமக்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். பணம் கேட்டு வருபவர் குறித்து விபரத்தினை மாநகராட்சிக்கு உடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p>